கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொழும்பு – என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊடக சந்திப்பிற்கு, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
”எந்தவொரு ஊடக இவ்வாறு நடத்தப்பட்டிருக்காது. விசேட பொலிஸ் பாதுகாப்பை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். ஊடக சந்திப்பிற்கு பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்பட்டமையானது, லீசிங் மாஃபியா எந்தளவிற்கு கொடூரமானது என்பதற்கு இதுவொரு உதாரணமாகும்;” என ஒன்றிணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவிக்கின்றார்.
லீசிங் மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறும் பட்சத்தில், அதனை சீசர்களுக்கு கொண்டு செல்ல சட்டத்தில் எந்தவித அதிகாரமும் கிடையாது என அவர் கூறுகின்றார்.
சுற்று நிரூபத்திலும் அவ்வாறான அதிகாரங்கள், சீசர்களுக்கு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment