யால தேசிய பூங்காவிற்குள் நுழைந்து வனவிலங்குகளுக்கு வன்கொடுமை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்குமாறு திஸ்ஸமஹாராம நீதவான் தரிந்து சமிர சில்வா உத்தரவிட்டுள்ளார்.
ஹஸ்மிதீன் மொஹமட் சபீக், மொஹமட் கௌஸ், மொஹமட் சுவேர், எஸ்.எச்.புத்திக சதுரங்க, அப்துல் ரக்கிகா மொஹமட், பி.ஜி.எஸ்.அஞ்சுலா, ஆர்.எம்.சம்பத், டி.எம்.மயூர லக்ஷான் ஆகியோரே இவ்வாறு சட்டவிரோதமாக வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment