Recent Posts

Search This Blog

T20 உலகக் கோப்பை 2022க்கான பரிசுத் தொகையை அறிவித்தது ICC - சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் உட்பட ஏராளமான பரிசுத் தொகைகள்.

Friday, 30 September 2022

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  T20 உலகக் கோப்பை 2022க்கான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது, அதன்படி  சாம்பியன் கிண்ணத்தை சுவீகரிப்பவர்கள்  1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக வெல்வார்கள்.


 வெற்றி பெறும் அணி  $1.6 மில்லியன் பரிசுத் தொகையைப் பெறும் என்று ஐசிசி அறிவித்ததுள்ளதுடன் , இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு அதன்  பாதி தொகை வழங்கப்படும்.


கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெறும் 16 அணிகள் கொண்ட போட்டியின் முடிவில்,  செமி பைனல் வரை வந்து தோல்வி அடைந்த  போட்டியாளர்கள் ஒவ்வொருவரும்  $400,000 பெறுவார்கள்.


சூப்பர் 12 சுற்றில் வெளியேறும் எட்டு அணிகளுக்கு தலா 70,000 டாலர்கள் வழங்கப்படும். 

ஐசிசி ஆடவர் T20 உலகக் கோப்பை 2021 இல் கடந்த ஆண்டைப் போலவே, சூப்பர் 12 கட்டத்தில் 30 ஆட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு வெற்றி $40,000 மதிப்புடையதாக இருக்கும்.


ஆப்கானிஸ்தான்,

 ஆஸ்திரேலியா, 

பங்களாதேஷ், 

இங்கிலாந்து, 

இந்தியா, 

நியூசிலாந்து, 

பாகிஸ்தான் 

மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் சூப்பர் 12 கட்டத்திற்கு நேரடியாகச் சென்றன.


மற்ற எட்டு அணிகளான நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குழு A மற்றும் மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே குழு B - நான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் விளையாடும். 


முதல் சுற்றில் எந்த வெற்றிக்கும், $40,000 பரிசுத் தொகை வழங்கப்படும், 12 போட்டிகள் $480,000 ஆகும்.


முதல் சுற்றில் வெளியேறும் நான்கு அணிகளுக்கும் தலா $40,000 வழங்கப்படும். 







No comments:

Post a Comment