வாடகைக்கு வீடு பார்ப்பதாக கூறி தலவத்துகொட பகுதியிலுள்ள
வீடொன்றிற்குள் நுழைந்த இரு பெண்கள் உட்பட ஐவர் உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி தாக்கி காயப்படுத்திவிட்டு தூக்க மாத்திரைகளை கொடுத்துவிட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தின் சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
கடந்த 7ஆம் திகதி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந் நிலையில், இந்தக் குற்றச் செயல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பேராதனை, பிலிமத்தலாவ மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் முறைப்பாடு செய்த நபரின் கடையொன்றை வாடகை அடிப்படையில் பெற்று உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment