
கம்பளை மற்றும் பாணந்துறை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி ஈட்டியுள்ளது.
அதற்கிணங்க பாணந்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது சபையில் 87ஆசனங்களில் 53ஆசனங்களை பொது ஜன பெரமுன பெற்றுக் கொண்டுள்ளது. அதை வேளை, எதிர்க்கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய குழு 34வாக்குகளை மட்டுமேபெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் கம்பளை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எண்ணிக்கையில் பொதுஜன பெரமுனவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குழு ஆறு பணிப்பாளர் பதவிகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய குழு ஒரே ஒரு பணிப்பாளர் பதவியை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளது.
அதற்கிணங்க கம்பளை மற்றும் பாணந்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் இரண்டிலும் பெரும்பான்மையைப் பெற்று பொது ஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment