முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பதை நீடிக்கவுள்ளதாக சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக இங்கு வந்த போது வழங்கப்பட்ட அவரது குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புரிந்து கொள்கிறது.
அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) செய்தியாளர்களிடம் தெரிவித்தும் இருந்தார் .
முன்னாள் ஜனாதிபதி எப்போது நாடு திரும்புவார் என்பது தனக்குத் தெரியாது என்றும் ஆனால் கோட்டப்பாய ராஜபக்சே தலைமறைவாகவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை என அவர் தெரிவித்து இருந்தார்.
அதேவேளை கோட்டாபய ராஜபக்ச, கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாகவும், இலங்கையின் தலைநகரான கொழும்பின் புறநகரில் உள்ள தனது தனிப்பட்ட இல்லத்தில் மீண்டும் வாழ விரும்புவதாகவும் அடையாளம் கூறாத மற்றொரு அரசாங்க அதிகாரி தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 14 அன்று, மாலத்தீவில் இருந்து சவுதியா விமானத்தில் சாங்கி விமான நிலையம் வந்தபோது கோட்டாபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் 14 நாள் பயண அனுமதி வழங்கியது.
பணவீக்கம் அதிகரித்து உணவு மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளின் விலைகளை பாதித்ததால், ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் இலங்கையை விட்டு வெளியேறினார்.
சிங்கப்பூரில் தங்கி உள்ள
மேலும் அவர் அங்கு புகலிடம் கேட்கவில்லை என்றும் புகலிடம் வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவித்தன.
சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment