Recent Posts

Search This Blog

வயோதிப பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய இழுத்து சென்ற சிறுவன் பொலிஸாரால் கைது.

Tuesday, 26 July 2022


வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட குற்றத்தில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பொன்னாலை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் ஏற்றி சென்ற அப்பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் பொன்னாலை காட்டு பகுதிக்குள் வயோதிப பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, வன்புணர முற்பட்டுள்ளான்.

அதனை அடுத்து குறித்த பெண் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுவனை கைது செய்து, பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


No comments:

Post a Comment