Recent Posts

Search This Blog

எரிபொருள் பெற, அனைத்து முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் பிரதேச பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு அமைச்சர் வேண்டுகோள்.

Monday, 25 July 2022


தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு பதிவு செய்ய முடியாத வாகனப் பாவனையாளர்கள், நாளை வெள்ளிக்கிழமை முதல் வருமான உரிமத்துடன் ( வாகன லைசன்) பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.


தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பு தொடர்பான ட்விட்டர் செய்தி மூலம் மாற்று பதிவு முறையை அவர் வெளிப்படுத்தினார்.


முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அவற்றின் பதிவின் அடிப்படையில் தனித்தனியான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பில் 05 முக்கிய அப்டேட்கள் பின்வருமாறு:

1- அனைத்து முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் தங்களின் வாகனங்களை அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து தமக்கு வசதியான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


ஆகஸ்ட் 1 முதல் முச்சக்கர வண்டிகள் தமது பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து மட்டுமே எரிபொருளைப் பெற அனுமதிக்கப்படும்.


செசி எண்ணுடன் பதிவு செய்ய முடியாத வாகனப் பயனர்கள் ஜூலை 29 வெள்ளிக்கிழமை முதல் தங்கள் வருவாய் உரிமத்துடன் ( வாகன லைசன்) பதிவு செய்யலாம்.

49cc பைக்குகளைப் பயன்படுத்துபவர்கள் தங்களது உரிமங்களைப் பெறுவதற்கும், தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு பதிவு செய்வதற்கும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.


தோட்டக் கருவிகள், ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களது வாராந்த எரிபொருள் தேவைகளுடன் அந்தந்த பிரதேச செயலகங்களில் தமது தேவைகளைப் பதிவு செய்து எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment