Recent Posts

Search This Blog

டான் பிரியசாத்தின் சகோதரர் மர்ம நபர்களால் கொலை !!

Monday, 25 July 2022


டன் பிரியசாத்தின் சகோதரர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகுடவத்த மேம்பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். 

நேற்று (25) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இக்கொலையை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீதொட்டமுல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் எனவும் அவர்  டான் பிரியசாத்தின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கொலையாளியின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


No comments:

Post a Comment