Recent Posts

Search This Blog

ஜனாதிபதியும் பிரதமரும் ஆட்சியை ஒப்படைப்பதற்குத் தயாராக இருந்தால், நாட்டை பொறுப்பேற்க தயார் !

Monday, 27 June 2022


ஜனாதிபதியும் பிரதமரும் தம்மிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்குத் தயாராக இருந்தால், நாட்டை நடத்தத் தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


முறையான வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் புத்துயிர் பெற முடியும் என கட்சியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.




ஒரு நாடு அழிக்கப்படும் போது, அது மக்களால் புனரமைக்கப்பட வேண்டும். சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் பொருளாதாரத்தில் புத்துயிர் பெற்று நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் தங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


சர்வதேச நாணய நிதியமோ அல்லது உலக வங்கியோ நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.


தற்போதைய நிர்வாகத்திற்கு பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான திட்டமோ அல்லது தொலைநோக்கு பார்வையோ இல்லை.


தனது அணியை அமைச்சரவை அமைக்க அனுமதித்தால், பொருளாதாரத்தை மீட்டெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment