நாவலப்பிட்டி கல்பொட நீர்வீழ்ச்சியில் நண்பர்கள் குழுவுடன் குளித்துக் கொண்டிருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் இன்று (செவ்வாய்க்கிழமை 26) மதியம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நண்பர்கள் குழுவுடன் புகையிரதத்தில் கல்பொடவுக்கு வந்த கடுகன்னாவ, பானபொக்கவைச் சேர்ந்த 15 வயதுடைய பசிந்து சமோத் என்பவரே கல்பொட நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
குறித்த மாணவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment