அனுராதபுரம், தம்புத்தேகம தேக்கவத்தை பகுதியில் சிசுவை புதைத்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீண்ட காலமாக கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த இவர், காலதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குழந்தை உருவாகி 6 மாதமாக இருக்கும் போது கருவை கலைப்பதற்காக சில மாத்திரைகளை உட்கொண்டதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களை ஜனவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment