Recent Posts

Search This Blog

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்க வட-கிழக்கு முஸ்லிம் பேரவை கோரிக்கை..

Sunday, 26 November 2023


மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,
ஜனாதிபதி
ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு
கொழும்பு.

மேதகு ஜனாதிபதி அவர்களே!
கிழக்கு ஆளுனர் நியமனம்.

கிழக்கு மாகாணம் சிக்கலான இனத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாகாணம் என்பதை தாங்கள் முழுமையாக அறிவீர்கள்.கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படவிருக்கும் ஆளுனர் தமிழராக இருந்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பதும்,முஸ்லிமாக இருந்தால் தமிழர்கள் எதிர்ப்பதும் ,சிங்களவராக இருந்தால் தமிழ்,முஸ்லிம் மக்கள் இணைந்து எதிர்ப்பதும் கிழக்கின்
நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடாத்துவதில் பாரிய பின்னடைவுகளை இதுவரையிலும் ஏற்படுத்தியுள்ளது

இதுவரையிலும் கிழக்கில் நியமிக்கப்பட்ட ஆளுனர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளே மிகச் சிறப்பாக தமது கடமைகளை செய்துள்ளது மக்களிடையே பதிவாகியுள்ளது,இராணுவ அதிகாரிகள் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் எந்த இனமும் நிர்வாக ரீதியாக பாதிக்கப் பட்டதாக எந்த பதிவுகளையும் காண முடியவில்லை

ஆகவே மேதகு ஜனாதிபதி அவர்களே!

எதிர்காலத்தில் கிழக்குக்கு நியமிக்கப்படவிருக்கும் ஆளுனரை மூன்று இனங்களும் விரும்பும்,மூன்று இனங்களையும் பாதிக்காத வகையில் நிர்வாகம் செய்யும் இராணுவ அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்களை நியமித்து கிழக்கின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறோம்.

ஜெ.எல்.எம். ஷாஜஹான்
பணிப்பாளர்
வட-கிழக்கு முஸ்லிம் பேரவை.


No comments:

Post a Comment