அதேவேளை, விராட் கோலி உடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை ஒப்பீடு வைத்து பேசுவது தற்காலத்தில் மிக அதிகமாக இருக்கிறது.
இதற்கு விராட் கோலியும் கூட தற்காலத்தில் பாபர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியிருக்கிறார்.
பாபர் அசாம் மிகக் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக் கூடியவர் கிடையாது. ஆனால் அவர் சீராக ரன்களை எடுக்க கூடியவர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகம்மத் ஆசிப் கூறும் பொழுது “இப்பொழுதும் என்னால் பாபர் அசாமுக்கு T20 கிரிக்கெட்டில் மெய்டன் ஓவர் வீச முடியும். அவரால் நல்ல பந்துகளை அடித்து விளையாட முடியாது!” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவருடைய பேச்சு சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது!
No comments:
Post a Comment