Recent Posts

Search This Blog

இந்தியாவிற்கு செல்ல பாகிஸ்தான் வீரர்களுக்கு 'விசா' வழங்கப்பட்டது - பக்கத்து நாடான இந்தியாவுக்கு நாளை டுபாய் ஊடாக செல்கிறது பாகிஸ்தான் அணி

Monday, 25 September 2023


இந்தியாவில் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் இழுபறி நீடித்தது.



இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதில் கால தாமதம் செய்வதாகவும், இது உலகக் கிண்ண போட்டிக்கு தங்கள் அணி தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ஐ.சி.சி.) முறைப்பாடு செய்தது.



இந்த நிலையில் விசா பிரச்சனை நேற்று முடிவிற்கு வந்தது. ஆனால் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் அவர்களுக்கு 'விசா' வழங்கப்பட்டுள்ளது.



பாகிஸ்தான் அணி நாளை (27) அதிகாலை டுபாய் வழியாக ஐதராபாத் செல்கிறது. 29 ஆம் திகதி ஐதராபாத்தில் நடக்கும் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுகின்றது.



பாகிஸ்தான் அணி முதலில் டுபாய் சென்று அங்கு இரு நாட்கள் பயிற்சி எடுத்து விட்டு இந்தியாவிற்கு வர திட்டமிட்டு இருந்தது. ஆனால் 'விசா' தாமதத்தால் இந்த திட்டத்தை கைவிடப்பட்டுள்ளது


No comments:

Post a Comment