Recent Posts

Search This Blog

சமூக ஊடகங்களில் கருத்துரைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது - இதனால் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

Thursday, 28 September 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அதன் தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்குலேவே விமலனா மகாநாயக்க தேரரை இன்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக் கொள்வதற்கான முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படவில்லை.

அத்துடன் சமூக ஊடகங்களில் கருத்துரைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.

குறித்த விடயத்தில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment