
ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவை இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு நிரந்தர ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் குறிப்பிட்டார்.
கிழக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரனில் கலந்துகொண்ட நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியிள்ளார்.
ஜனாதிபதிக்கு அதிகம் தெளிவுபடுத்த தேவையில்லை என நான் இன்று முடிவுசெய்தேன்.நாம் என்ன கதைக்க வேண்டும் என நினைத்ததை ஜனாதிபதி அறிந்து வைத்துள்ளார்.
லீகூவான்யு போன்ற தலைவர்கள் சில முடிவுகள் எடுக்கும் போது அது பிரபலமற்ற முடிவுகளாக கூறப்பட்டது.ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் அந்த முடிவு சரி என மக்களால் கூறப்பட்டது.ஜனாதிபதியின் தீர்மானங்களும் அவ்வாருதான் என பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவை இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு நிரந்தர ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும்.அப்படி செய்தால் இந்த நாட்டை முன்னேற்ற முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment