Recent Posts

Search This Blog

திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த இளம் யுவதி திடீர் என உயிரிழந்த சம்பவம் பதிவு.

Sunday, 27 August 2023


திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஹொரணை பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



உயிரிழந்த யுவதி, தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு கூட்டத்துடன் நடனமாடியுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



உயிரிழந்த யுவதி மேலும் இரு யுவதிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த போது அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகவும் சிறிது நேரத்தில் சுகயீனமடைந்து ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



ஹொரணை வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸாரினால் தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment