Recent Posts

Search This Blog

சறககச சனற சகச பஸஸல மதய தனயர பஸ - 5 பரன நலம கவலககடம மலம பலர கயம

Monday, 26 June 2023


எஹலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.


இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸெல்ல பயிற்சி நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இன்று (26) காலை 10.00 மணியளவில் தனியார் பஸ் ஒன்று வீதியில் சறுக்கிச் சென்று சொகுசுப் பஸ்ஸின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்துடன், சொகுசு பஸ் முன்னோக்கிச் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியது.


இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


No comments:

Post a Comment