Recent Posts

Search This Blog

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு மக்கள் மீண்டும் வரிசையில்..

Wednesday, 31 May 2023


அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை(30) இரவு முதல் மக்கள் எரிபொருளை பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர்.



கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்று கூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் கா முடிகின்றது.



மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.



(பாறுக் ஷிஹான் )


No comments:

Post a Comment