ஆக்கமும் தகவலும்: ரியாஸ் சவாஹிர் தலைவர் SLMC-ITALY
இத்தாலியில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் இவ்வருட ஈதுல் பித்ர் பெருநாள் ஒன்று கூடலும் வருடாந்த அல்குர்ஆன் மனனப்போட்டியின் பரிசளிப்பு விழாவும் மிலான் நகரின் ACHILLE FEROBOLI யில் பகல் உணவு, மாலை சிற்றுண்டி, சிறுவர்களுக்கான இனிப்புப் பொதிகள் என பல சிறப்பம்சங்களோடு 23/04/2023 ம் தினத்தில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மிலான் மாநகரையும் அதனை அண்டியும் வாழும் பல குடும்பங்கள் (இரு நூறுக்கும் அதிகமானவர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து மகிழ்ந்தார்கள்.)
இந்த வருட ஜனவரி மாதம் 8ம் தினத்தில் இடம் பெற்ற அல்குர்ஆன் மனனப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டமை இந்த ஒன்று கூடலின் விஷேட அம்சமாக ருந்தது.
SLMC -ITALY பல வருடங்களாக ஏற்பாடு செய்கின்ற சமூக ஒன்று கூடல்கள் இத்தாலியில் வாழும் சகல இலங்கை முஸ்லிம்களையும் ஒரு கூரையின் கீழ் ஒன்று திரட்டி ஆரோக்கியமான முஸ்லிம் சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் என்பதற்கான சிறப்பான சான்றாகும்.
இத்தாலி இலங்கை முஸ்லீம் சமூக அமைப்பு (SLMC-ITALY) கடந்த பல வருடங்களாக இத்தாலியில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின மிக முக்கிய தேவையான சமய, சமூக, கல்வி, கலாச்சார நிகழ்ச்சிகளை தம்மிடமுள்ள குறுகிய வளங்களையும் வளவாளர்களையும் பயன்படுத்தி, சிறப்பாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது என்றால் மிகையாகாது.
எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தாலியில் வாழும் இலங்கை முஸ்லீம் சமூகத்தை பொருந்திக் கொள்வானாக! அவர்களும் அவர்களது எதிர்கால சந்ததிகளும் தூய இஸ்லாத்தோடு தொடர்ந்தும் வாழ்வதற்கு அருள் பாளிப்பானாக.ஆமீன் ஆமீன் யா ரப்பால் ஆலமீன்.
No comments:
Post a Comment