Recent Posts

Search This Blog

I ஹம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் மிருகங்களை கொன்று இறைச்சியாக்கி விற்பனை..

Monday, 24 April 2023
ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் மிருகங்களை கொன்று இறைச்சியாக்கி விற்பனை செய்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட உறுப்பினர் புத்திக பத்திரன இன்று (25) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.



சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.



இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இது எனக்கு சம்பந்தமான விடயம் அல்ல, வனவிலங்கு அமைச்சருக்குச் சொந்தமான விடயம். எனக்குத் தெரிந்த வரையில் இது தொடர்பாக மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார். எதிர்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் என தெரிவித்தார்


No comments:

Post a Comment