20 வருடமாக ஒரே மஸ்ஜிதில் குறைந்த சம்பளத்தில் சிறப்பாக பணியாற்றி அனைத்து ஊர் மக்களையும் கவர்ந்த இமாம் அஷ்ஷெய்க் அப்துல் ரஹ்மான் ஹபீப் முஹம்மத்
இரத்தினபுரி பிரதேசத்தில் கொடிகமுவ பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அசீசியாவில் பிரதான இமாமாக கடமை புரியும் இமாம் அஷ்ஷெய்க் அப்துல் ரஹ்மான் ஹபீப் முஹம்மத் அவர்கள் 2003 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் இன்று 2023 ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் தனது கடமையை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.
இவர் மஸ்ஜிதில் கடமை பொறுப்பேற்கும் போது மாதம் 6000 ரூபா சம்பளமாக பெற்றதுடன் காலாத்துற்கு ஏற்ப ஆமைவேக அதிகரிப்பில் தற்போது 35 000 ரூபா சம்பளமாக பெற்றுக்கொள்கிறார். (அல்லாஹ் இவரின் வாழ்வை பரகத் செய்வானாக)
இவர் ஜாமிஅதுல் பலாஹ் அரபிக் கல்லூரியில் கத்தான்குடியில் தனது மெளலவி பட்டத்தை முடித்தவர்.
தற்போது இவரின் வயது 58 இவர் தொடன்வத்த தியதலாவ பிரதேசத்தை சேர்ந்த நபர். இவருக்கு 4 பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள் அதில் ஒன்று ஹாபிழா, ஆலிமா அடுத்து இரண்டு ஆண் பிள்ளைகள் இருவரும் ஆபிழ்கள், ஆலிம்கள். மாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் பிள்ளைகளை சிறப்பாக வளர்த்துள்ளார்.
எந்தவொரு பிரதேச மஸ்ஜித்களை எடுத்துக்கொண்டாலும் அதில் பிரதான இமாம்கள் பல காரணங்களுக்காக மஸ்ஜிதில் இருந்து விலகி வேறு மஸ்ஜிதுக்கு அல்லது வேறு தொழிலுக்கு செல்வதனை அவதானிக்கலாம்.
மஸ்ஜிதில் கிடைக்கும் ஊதியம் போதாமை, புதிய நிர்வாகிகள் தெரிவு செய்தபின் அவர்களின் முரண்பாட்டால் விலகல், ஊர் மக்களால் வரும் இடர்கள் இவ்வாறான பல காரணங்களினால் மஸ்ஜித் இமாம்கள் விலகிச் செல்வதனை அவதானிக்கலாம்.
எனினும் அனைத்து சவால்களையும் பொருமையுடன் நல்ல அஹ்லாக் உடன் நடந்து கொண்டு 20 வருடத்துக்கு மேல் தனது கடமைய செய்துள்ளார் இமாம் அஷ்ஷெய்க் அப்துல் ரஹ்மான் ஹபீப் முஹம்மத். இவர் மிக்க ஒரு பொருமையுடையவர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜம்மீய்யத்துல் உலமா சபையினால் ஆரம்பிக்கப்பட்ட மக்தப் குர் ஆன் மத்ரஸா இரத்தினபுரியில் முதல் முதலாக இவரின் தலையில் (அதிபர்) ஆரம்பிக்கப்பட்டதுடன் 150 க்கு மேலான மாணவர்கள் கல்வியை தொடர்ந்து கற்றதுடன் 4 வகுப்புக்கள் காணப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் மக்தப் மூடப்பட்ட போதும் தற்போதும் பள்ளிக்கூடம் நடாத்தப்பட்டு மார்க்க விடயங்களை மாணவர்களுக்கு வழங்கி வருவதனை அவதானிக்கலாம்.
தனது கடமையை சிறப்பாக செய்வதுடன் விடுமுறைகள் எடுப்பதும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. மஸ்ஜிதுக்கு வரும் அனைவருக்கு இடையே அறிவுரைகளையும் வழங்கி அன்பாக பழகும் ஒரு சிறந்த மனிதர்.
நோன்பு காலங்களில் விடுமுறை எடுக்காது மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளையும் முன்னின்று நடாத்தும் ஒரு பண்பையும் கொண்டுள்ளார்.
இவரிடம் கல்வியை தொடர்ந்த மாணவர்கள் மத்ரஸா சென்று ஆலிம்களாகவும், ஆபில்களாகவும் உருவாகியிருப்பதனை அவதானிக்கலாம்.
அநேகமாக எமது நாட்டில் உள்ள மஸ்ஜித்களில் வேலை செய்யும் இமாம்களின் சம்பளம் குறைவாகவே உள்ளது. வருமானம் ஈட்டும் மஸ்ஜித்களை தவிர அனைத்து மஸ்ஜித்களிலும் இமாம்களின் சம்பளத்தை உயர்த்தி கொடுப்பதற்கான வேலை திட்டங்களை மேற்கொள்வது அவசியமான தேவையாக உள்ளது.
அதே போல் இவ்வாறான இமாம்களுக்கு தங்குமிட வசதிகளை (குடும்பத்துடன்) ஏற்படுத்தி கொடுப்பதற்கு ஏற்படாடு செய்யவேண்டும். குடும்பத்தை பிரிந்து குறைந்த சம்பளத்துடன் தியாகத்தோடு வேலை செய்யும் இமாம்களை கண்னியப்படுத்துவதோடு அவர்களுக்கு பொருளாதாரரீதியாக ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மஸ்ஜிதுல் அசீசியாவில் கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் காணப்படுவதோடு இவர்களிடம் கிடைக்கப்பெரும் சந்தா பணத்தின் மூலமே அனைத்து செலவுகளும் ஈடுசெய்யப்படுகின்றது. தற்போது இரண்டு இமாம்கள் ஒரு முஅத்தின் பணிபுரிந்து கொண்டு இருப்பதனை அவதானிக்கலாம்.
இரத்தினபுரியில் அதிக தனவந்தர்கள் இருப்பதனை அவதானிக்கலாம் ஆரம்ப காலத்தில் தனவந்தர்கள் மஸ்ஜித்களை நடாத்துவதற்கு வருமான மூலங்களை செய்து விட்டு சென்றார்கள் அது அவர்களின் மறுமைக்கு ஒரு நிலையான விளைச்சல். தற்போது உள்ள தனவந்தர்களுக்கு உள்ளத்தை விசாலப்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளை செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக!
மஸ்ஜித்களில் வருமான மூலம் காணப்படுகின்ற போது நிர்வாகத்தை திட்டமிட்டு, வேலைசெய்யும் ஊழியர்களை சிறப்பாக கவனிக்கமுடியும்.
அசீசியா மஸ்ஜிதில் அநேக வேலைகள் இருப்பினும் வருமான மூலம் இல்லாதிருப்பதால் அனைத்து வேலைகளும் இடைநிருத்தப்பட்டு நன் கொடைகள் கிடைத்தால் மாத்திரமே குறித்த வேலையை செய்கிறார்கள்.
இவ்வாறு இருக்க இமாம்களுக்கு எவ்வாறு சம்பளத்தை திருப்தியாக கொடுக்க முடியும். அனைத்து மஸ்ஜித்களில் பணிபுரியும் பிரதான இமாம்களுக்கு ஒரு மோட்டார் சைக்கில் , குடுப்பத்தோடு இருப்பதற்கான வசதி, தற்காலத்தில் குறைந்தது ஒரு லட்சம் ரூபா சம்பளம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவர் தற்போது 58 வயது 60 வயதை தாண்டினால் அவருக்கு ஒரு ஓய்வூதியத்துக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு நாட்டில் அநேக மஸ்ஜித்களில் வருமான மூலம் இல்லாதிருப்பாதால் இமாம்களின் பற்றாக்குறை காணப்படுவதோடு தொழுகையை சிறப்பாக நடாத்தவும் , பள்ளிக்கூடங்களை நடாத்தவும், நேரத்துக்கு அதான் சொல்லவும் இயலாத நிலை காணப்படுவதனை அவதானிக்கலாம்.
இமாம் அஷ்ஷெய்க் அப்துல் ரஹ்மான் ஹபீப் முஹம்மத் அவர்களின் அனைத்து விடயங்களையும் அல்லாஹ் பரகத் செய்வானாக!
அசீசியா மஸ்ஜித்
No comments:
Post a Comment