சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் ஓட்டிச் சென்ற வேன் ஒன்றுடன் மோதுண்டதில் கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டி கடல் வீதியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வேனை நிறுத்துமாறு சைகை செய்ததாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வேனை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் சர்வதேச பாடசாலை மாணவனால் வேனைக் கட்டுப்படுத்த முடியாமல் கான்ஸ்டபிள் மீது மோதி காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment