கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் பொய்யான பெயரில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டு அங்குள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர், பாதால உலக நபர் என தெரியவந்துள்ளதுடன், அவருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
No comments:
Post a Comment