ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டரீதியாக அறிவிக்கப்படாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி ஏன் வேட்புமனுக்களை கையளித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் கூறியது முற்றிலும் பொய்யானது என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொய் சொல்வதில் மூன்று வகைகள் இருக்கிறது. முதலாவது பொய், இரண்டாவது புள்ளிவிபரங்களுடன் பொய், மூன்றாவது அப்பட்டமான பொய்யாகும்.
இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்றில் கூறியது, அப்பட்டமான பொய்யாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் உள்ளூராட்சி தேர்தல் தாமதிப்பதற்கான குற்றச்சாட்டு, திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சகர் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் இன்று ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறிய கருத்துக்களில் இருந்து ஜனாதிபதியே இதற்கு பொறுப்பு என்பது தெரியவந்துள்ளதாக டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். உள்ளூராட்சி தேர்தல் என்ற சடலம் இப்போது விக்ரமசிங்கவின் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கைக்கு எதிராக முழு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும் என நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment