Recent Posts

Search This Blog

நீர் குட்டையில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு... சம்மாந்துறை பகுதியில் சம்பவம்.

Monday, 27 February 2023


சம்மாந்துறை சென்னல் கிராமம் 1 சேவையாளர் பிரிவில் உள்ள கல்குவாரி குட்டை பகுதியில் குளிக்க சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்வமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (26) மாலை 5மணியளவில் குறித்த மரணம் சம்பவித்துள்ளது.



சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,



மூன்று சிறுவர்கள் சம்பவ இடமான கல்குவாரி பகுதியில் நீர் காணப்பட்டதால் குளிப்பதற்காக தயாராகியுள்ளனர். மரணமான சிறுவன் மற்ற இரு நண்பர்களையும் குளிப்பதற்காக அழைத்துள்ளார். அவர்கள் முடியாது என்று கூற அச் சிறுவன் முதலில் ஓர் உயரமான குன்றில் ஏறி குறித்த பகுதியில் பாய்ந்துள்ளார். குட்டையின் ஆழத்தினை அறியாமல் பாய்ந்த அச் சிறுவன் காணவில்லை என இருந்த இரு சிறுவர்களும் சத்தம் போட்டு கூச்சளிட்டதாக இரு சிறுவர்களும் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மரணித்த சிறுவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இன்று (27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த கல்குவாரி குட்டை சுமார் 20 வருடங்களாக உபயோகிக்கப்படாமல் காணப்படுவதாகவும் சுமார் கிட்டத்தட்ட 30 அடி ஆழமாக உள்ளதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.



இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்


No comments:

Post a Comment