மீள் நிர்மாணம் செய்யப் பட்ட நிககொள்ள அல் பலாஹ் தக்கியாப் பள்ளி நேற்று 30 ம் திகதி திறந்து வைக்கப் பட்டது
நிககொள்ள மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பினணந்த நீண்ட கால வரலாற்றைக் கொண்ட. இந்த தக்கியாப் பள்ளி ஊர் மக்களால் சங்க மடுவம் என அழைக்கப் படுவதோடு தொன்று தொட்டு, ஊர் சம்பந்தமான விடயங்கள், குர்ஆன் மத்ரஸா, பாலர் பாடசாலை, போன்றனவும் இதன் ஒரு பகுதியிலேயே இயங்கி வந்தது
சில வருடங்களாக சேதமடைந்திருந்த இக் கட்டிடம், OJM வாலிபர் அமைப்பின் வேண்டுதலில் வோர்ல்ட் முஸ்லிம் லீக் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப் பட்டு இன்று நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் மெளலவி இம்ரான் அவர்களால் மக்கள் பாவனைக்காக ஊர் மக்களிடத்தில் கையளிக்கப் பட்டது. ஊரின் சார்பில் நிககொள்ள பழய ஜும்ஆப் பள்ளி வாயல்
நிறுவாக உப தலைவர் திரு நசீர் அவர்கள் உத்தியோக பூர்வணாக கட்டிடத்தை பொறுப் பேற்றுக் கொண்டார்.
நிகழ்வில் ஊர் மக்கள். நிககொள்ள ஜும்ஆப் பள்ளி நிர்வாகத்தினர் என பெறும் திரளானோர் திரண்டிருந்தனர்
No comments:
Post a Comment