Recent Posts

Search This Blog

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடப் போகிறேன் - வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது ; மைத்திரிபால சிறிசேன

Monday, 30 January 2023


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.



அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.



அத்தோடு, தமது ஆட்சிக் காலத்தில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காகவும், ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்காகவும், மற்றவர்கள் செய்த தவறுக்கு நட்டஈடு வழங்க வேண்டி ஏற்பட்டமைக்காகவும் இறைவனிடம் மன்னிப்பு கேட்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.


No comments:

Post a Comment