Recent Posts

Search This Blog

வசந்த முதலிகேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலிருந்து விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு - பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

Tuesday, 31 January 2023


தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2022 இல் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக 140 நாட்களுக்கும் மேலாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த மாணவ ஆர்வலர் தடுத்து வைக்கப்பட்டார்.


No comments:

Post a Comment