FAROOK SIHAN
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோளாவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அக்கரைப்பபற்று நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இம்மாதம் 21ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதி தீயில் எரிந்தது.
இதன்போது நீதிமன்ற ஆவணப்பகுதி முற்றாக நாசமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment