Recent Posts

Search This Blog

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்தவர்கள் கைது.

Wednesday, 30 November 2022


பாணந்துறை , வாலான பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் ஊடாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் இனிப்பு பானம் மற்றும் லாலிபாப் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்கள் 54 இனிப்பு பான போத்தல்கள் மற்றும் 55 வகையான லாலிபாப்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இனிப்பு பானம் மற்றும் லாலிபாப்களுக்கு அடிமையான மாணவர்களின் பெற்றோரின் புகார்கள் மற்றும் தனிநபரின் ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சில காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த இனிப்பு வகைகளுக்கு அடிமையாகி பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (29) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment