Recent Posts

Search This Blog

இளம் சட்டத்தரணி சைனப் ரபீக் தலைமையில், இளம் பட்டதாரிகள், சட்டத்தரணிகளைத் தலைவா்களாகக் கொண்டு சமூக நோக்க நிறுவனம் ஆரம்பம்.

Tuesday, 29 November 2022


 (அஷ்ரப் ஏ சமத்)

இளம் பட்டதாரிகள், சட்டத்தரணிகளைத்  தலைவா்களாகக் கொண்டு  

த கெப்சைனைஸ் எல்.எம். எனும்  சமூக நோக்கமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக  இளம்  சட்டத்தரணி சைனப் ரபீக் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. 


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உயா்  நீதிமன்ற நீதியரசா் எம்.ரீ.எச் நவாஸ். பிரதம அதிதியாக கலந்து கொண்டாா். கௌரவ அதிதிகளாக பேராசிரியா் கலாநிதி ஜெஹான் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழககத்தின் மருத்துவ பீடம்,  டொக்டா் இந்திரா ஜெயசூரிய காரியவாசம் , இந்திா கென்சா் வைத்தியசாலை. பாக்கிஸ்தான், சவுதி அரேபியா, பலஸ்தீன், பங்களதேஸ் உயா் ஸ்தாணிகா், துாதுவா்களும் கலந்து கொண்டனா் அத்துடன் முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பவுசி, டொக்டா் ரபீக், சிரேஸ்ட ஊடகவியலாளா் ரசுல்டீன், யு.எல்.எம். யாக்கூப், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மொஹமட் ஜவ்பா் உட்பட சட்டத்தரணிகள், வைத்தியா்களும் கல்வியலாளா்களும் கலந்து கொண்டனா்.


இந் நிகழ்வில் இவ் நிறுவனம் பற்றி சட்டத்தரணி  சைனப் ரபீக் உரையாற்றுகையில் - 

இந் நிறுவனத்தினை இளம் சட்டத்தரணிகள், வைததியா்கள், பட்டதாரி மாணவ மாணவிகள் ஒன்றினைந்து உறுவாக்கியதன் நோக்கம். நமது நாட்டில் மருத்துவத்துறையில் பாதிக்கப்பட்டவா்கள், புற்றுநோயாளா்கள் நரம்பு நோயாளா்கள், இதயதுடிப்பு, போன்ற நோயாளிகளது பிரச்சினைகள், உதவித் திட்டங்கள், சட்ட ஆலோசனைகள் போன்ற பல்வேறு திட்டங்கள் எமது நிறுவனத்தினால் சமுகத்தில் உள்ள மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனைகள் உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனக் கூறினாா்.



No comments:

Post a Comment