எதிர்வரும் வருடம் நாட்டுக்கு மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவேன். இல்லையென்றால் அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்வேன் என ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க சூளுரைத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) கருத்தொன்றை முன்வைத்தபோதே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறுகையில், ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள இரத்தின கற்கள், நாட்டை விட்டு வெளியே போயுள்ளன.
ஆனால் 170 மில்லியன் டொலர் மட்டுமே நாட்டிற்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றேன்.
180 நாள்களுக்குள் நாட்டுக்குள் டொலர் வரவேண்டும். அது மட்டுமல்ல, அடுத்த ஆண்டு மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத்தருவேன். அவ்வாறு இல்லாவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்வேன் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment