Recent Posts

Search This Blog

நாட்டில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள்!

Thursday, 27 October 2022

மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.


அத்துடன் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் கார், மோட்டார்சைக்கிள், முச்சக்கர வண்டி, லொறி, மற்றும் பஸ் கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பில் ஆயிரத்து 406 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


குறித்த முறைப்பாடுகளில் முச்சக்கர வண்டிகள் கொள்ளைச்சம்பவம் தொடர்பில் 311 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



No comments:

Post a Comment