
வவுனியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்த சந்திப்புக்களில் கலந்து கொண்டார்.
வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானின் ஏற்பாட்டில் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர்களுடன் அந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், அந்த கலந்துரையாடல்களில் அடுத்துவரும் உள்ளூராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மீளவும் பொதுஜன பெரமுனவின் ஆட்சியை புதிய கூட்டணியாக மலரச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment