Recent Posts

Search This Blog

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி - கோத்தபய ராஜபக்சவை சந்தித்தார்.

Thursday, 29 September 2022


இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவை கொழும்பில் சந்தித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சுப்பிரமணியன் சுவாமி இந்திய வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் குழுவுடன் சென்றிருந்தார்.


பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி நாளை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) ஏற்பாடு செய்திருந்த 15 வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்திருந்தனர்.


ராஜபக்சே குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்ட சுப்ரமணியன் சுவாமி, மே மாதம் இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி தொடர்பில் கருத்து தெரிவித்ததற்காக சமூக ஊடகங்களில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டார்.


சுவாமி தனது ட்விட்டர் பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும். தற்போது இந்திய எதிர்ப்பு வெளிநாட்டு சக்திகள் மக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது.

அவர் தனது செய்தியில் இலங்கையைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், இலங்கையில் பதிவாகும் அமைதியின்மை குறித்து அவர் கருத்து வெளியிட்டதாக பல சமூக ஊடக பயனர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.


No comments:

Post a Comment