Recent Posts

Search This Blog

I சவூதி அபிவிருத்தி நிதிய நிறைவேற்றுப் பணிப்பாளருடன் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்துரையாடல்.

Sunday, 28 August 2022

சவூதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சுல்தான் அல்முர்ஷித், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தலைநகர், ரியாதிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் (28) இச்சந்திப்பு நடந்தது. சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பிக்கீர்முஹம்மது ஹம்ஸாவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

சவூதியின் நிதி ஒத்துழைப்பில்
இலங்கையில் மேற்கொள்ளவுள்ள தொழில் வாய்ப்புக்கள் குறித்தும், இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விஷேட பிரதிநிதியாக, நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று முன்தினம் சவூதி அரேபியா சென்றுள்ளார். அங்கு உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சு நடாத்தவுள்ள அமைச்சர்,
முதற்தடவையாக அபிவிருத்தி நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுல்தான் அல்முர்ஷிதை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment