Recent Posts

Search This Blog

முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் தொடர்பில் விசாரணை... பொலிஸ் குழுவொன்றும் நியமனம்.

Saturday, 27 August 2022


முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான பிரிவில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய சட்டரீதியான வங்கி செயற்பாடுகளுக்கு புறம்பாக முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணய பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் ஊடாக வெவ்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதன் காரணமாக முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை பெறவோ, செலுத்தவோ வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை விரிவுப்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment