Recent Posts

Search This Blog

ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

Friday, 26 August 2022


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு கடிதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ரஞ்ஜன் ராமநாயக்க இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்க சத்திய கடிதத்தின் ஊடாக நீதிமன்றத்திடம் நேற்றைய தினம் மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்தநிலையில், ஜனாதிபதியின் அனுமதியின் கீழ், பொது மன்னிப்பு ஆவணத்தில் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவிக்கின்றார்.




No comments:

Post a Comment