Recent Posts

Search This Blog

கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்கின்றது கூட்டமைப்பு !

Thursday, 25 August 2022

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தி, முன்னதாக நாடளாவிய ரீதியில் முன்னெடுத்திருந்த கையெழுத்து வேட்டையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 


பயங்கரவாத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் எனவும் அது பயன்படுத்தப்பட்டது என்றும் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மீறிவிட்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.


எனவே இந்நாட்டிலுள்ள பிரஜைகள் அனைவரும் இந்த கையெழுத்து வேட்டை பிரசாரத்திற்கு தமது ஆதரவை வழங்கி, மிகமோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


பயங்கரவாத் தடைச் சட்டம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


நீண்டகாலமாகப் பயங்கரவாத் தடைச் சட்டம் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம்களுக்கு எதிராகவும் தற்போது தெற்கில் மாணவர்களின் போராட்டத்தை அடக்குவதற்காகவும் பயன்படுவதாக சுமந்திரன் தெரிவித்தார்.



No comments:

Post a Comment