எம்.வை.எம்.சியாம்)
எரிபொருள் பதுக்கல் மற்றும் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் நால்வர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நான்கு விசேட சுற்றிவளைப்புகளில் எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தமை மற்றும் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 400 லீட்டர் பெட்ரோல், 2,065 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. இதில் மேல் மாகாணத்தில் மாத்திரம் சுமார் 1,660 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைவாக
நாட்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த சுற்றிவளைகளின் மொத்த எண்ணிக்கை 1,489 எனவும் இதன்போது சந்தேகநபர்கள் 1,439 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 63,812 லீட்டர் பெட்ரோல், 198,962 லீட்டர் டீசல் மற்றும் 22744 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment