Recent Posts

Search This Blog

எனக்கு கூட்டுச்சொத்தாக உள்ள ஹோட்டல் சட்டபூர்வமான விதத்தில் கட்டப்பட்டது.... பொய்க் குற்றச்சாட்டு சுமத்ததினால், கடும் நடவடிக்கை எடுப்போம்.

Tuesday, 30 August 2022


சிங்கராஜ வனத்தில் உள்ள ஹோட்டல் சட்டபூர்வமான விதத்தில் கட்டப்பட்டது என தெரிவித்துள்ள ரோகித ராஜபக்ச பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிங்கராஜ வனத்திற்கு அருகில் மகிந்தராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்சவிற்கு ஹோட்டல் ஒன்றுள்ளதுஇதுவே மே 9 ம் திகதி தீக்கிரையாக்கப்பட்டது என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறிப்பிட்ட பகுதியில் தனக்கு கூட்டுச்சொத்தொன்றுள்ளதாக ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ள ரோகித ராஜபக்ச அனைத்து சட்டபூர்வ தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னரே ஹோட்டல் கட்டப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது தவறுநடந்திருந்தால் நீதித்துறை நடவடிக்கையை முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராகவேண்டும் எனது தரப்பு அவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment