Recent Posts

Search This Blog

இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினி

Friday, 29 July 2022


இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.  

மேலும், 75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும், 40,000 பேர் “சேலைன் ” மூலம் போஷாக்கை பெறுவதாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.  

தற்போது நிலவும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் இந்த நிலைமை மிகவும் மோசமானதாக அமையும் எனவும் படகொட மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment