
இலங்கைக்கு நேற்று முன்தினம் வர இருந்த பெட்ரோல் கப்பல் தாமதமானது ஏன் என்ற காரணம் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கி குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட பெட்றோலுக்கு கடன் பத்திரம் திறந்த போதும் குறித்த நிறுவனம் சர்வதேச வங்கியொன்றின் பிணை கோரியுள்ளதாகவும் குறித்த பிணையை வழங்க சர்வதேச வங்கிகள் எதுவும் இணங்கவில்லை என்பதால் குறித்த கப்பல் இலங்கைக்கு வருவது தாமதமாகி உள்ளதாக கூறப்பட்டது.
ஏற்கனவே இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனம் எரிபெருள் நிறுவனங்களுக்கு 735 மில்லியன் டொலர்களை செலுத்த தவறி உள்ள நிலையில் பெரும் நெருக்கடி நிலையை இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்நோக்கி உள்ளது.
No comments:
Post a Comment