Recent Posts

Search This Blog

நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், இடைக்கால அரசாங்கத்தில் இணைவேன் -சம்பிக்க ரணவக்க

Monday, 23 May 2022

தாம் முன்வைத்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில், சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்க தமது அணி தயார் என பாராளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிகரான ஒரு இடைக்கால அரசாங்கம் குறிப்பிட்ட காலப்பகுதியில் செயற்படும் மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்படும் போது செயற்படாது; 2015ல் 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்தியதைப் போன்றே ஒரு அரசாங்கம் எனவும் அவர் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், தற்போது இருக்கும் அரசாங்கம் இந்த வகையில் செயற்படவில்லை எனவும், தெளிவான காலக்கெடு, செயற்த்திட்டம் மற்றும் கலைக்கப்படும் காலம் ஆகியவை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


ஜனாதிபதி தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.


ஜூன் மாதம் பாராளுமன்றம் கூடும் போது அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவை அமைச்சரவை தீர்மானமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


பொலிஸார் , அரச துறை மற்றும் தேசிய தேர்தல் ஆணையம் ஆகியவை சுதந்திரமாக இருக்க வேண்டும்.


ஜனாதிபதி, பிரதமர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தாலும் ஏனைய நாடுகளில் குடியுரிமை வைத்திருக்கும் நபர்கள் இலங்கையில் பதவி வகிக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.


இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்திற்குள் அவர்கள் கடமைகளை அக்கறையுடன் நிறைவேற்றுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


வெளிநாட்டு உதவிகள் சிரத்தையுடன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரிப்பதற்காக பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் நடவடிக்கைகளுக்காக இந்த உதவிகள் வழங்கப்படக் கூடாது என்றும், இது நடக்காமல் இருக்க பிரதமர் தலையிட்டு உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



No comments:

Post a Comment