முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிக்கப்படும் அதே வேளையில் மேலதிகமான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 80 ரூபா அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் தெரிவித்தார்.
பயணக் கட்டண உயர்வு போதுமானதாக இல்லாவிட்டாலும், பயணிகளைக் கருத்திற் கொண்டு, தங்கள் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
நிலைமையை அவதானிப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான முடிவுகளை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment