Recent Posts

Search This Blog

மின் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி !!

Tuesday, 26 April 2022


மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. 


நேற்றிரவு (25) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். 


இருந்த போதிலும் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 


இலங்கை மின்சார சபையின் நாளாந்த இழப்பு சுமார் 500 மில்லியன் ரூபாவாகும் என தெரிவித்த அவர், இப்போது நாம் செய்ய வேண்டியது, உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதுதான் என தெரிவித்துள்ளார். 


இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவித்துள்ளார்



No comments:

Post a Comment