Recent Posts

Search This Blog

அமெரிக்க டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயரும்!

Wednesday, 27 April 2022

அமெரிக்க டொலரின் பெறுமதி இரண்டாயிரம் ரூபா வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன் இந்த வருட இறுதிக்குள்  அமெரிக்க டொலரின் பெறுமதி 500 ரூபாவாக பதிவு செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


நாடின் தற்போதைய கடன் நிலையானது அரசாங்கம் தமது கடமைகளில் இருந்து தவறியிருப்பதனை காட்டுவதாக காமினி விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன், நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு புதிய வேலைத்திட்டம் அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதனை அரசாங்கம் தற்போது உணர்ந்துகொள்வது மிகவும் அவசியமெனவும்  முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment