Recent Posts

Search This Blog

I

Friday, 25 March 2022

அவிசாவளை-தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு அருகில் நீராடச் சென்றிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இராஜகிரிய மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

யாத்திரை குழுவொன்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர் நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முற்பட்ட போதே இந்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், நீரில் மூழ்கிய பெண் பிரதேச மக்களால் உயிருடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்


No comments:

Post a Comment